தமிழக அரசானது அவ்வப்போது பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 4000 பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி மொத்தம் 7535 காலி பணியிடங்களுக்கு நிரப்பதற்கான திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1915 முதல் நிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெறுகிறது.

1205 ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று அந்த அட்டவணையில் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இணை பேராசிரியர்கள், உதவி நூலகர்கள், உதவி இயக்குனர் உட்பட 232 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.  மே மாதத்தில் காலியாக உள்ள இணை சட்டப்பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் உள்ளிட்ட 132 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. ஜூலை மாதத்தில் காலியாக உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உதவி பேராசிரியர் உள்ளிட்ட  4000 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

செப்டம்பர் மாதத்தில் முதல்வர் கள ஆய்வுப் பணிகளுக்கு 180 மாணவர்கள் பணியிடங்கள், நவம்பர் மாதத்தில் காலியாக உள்ள முதுநிலை உதவி பேராசிரியர்கள் 1915 பணியிடங்களுக்கும்,  டிசம்பர் மாதத்தில் காலியாக உள்ள பிடி உதவி அலுவலர்கள் மற்றும் டிஆர்டி.இ ஆகிய 1205 பணியிடங்களுக்கும், மார்ச் 2026 வட்டார கல்வி அலுவலர்களுக்கான 51 பணியிடங்கள் உள்ளிட்ட இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பல்கலைக்கழகங்கள் தேவைக்கேற்ப பணியிடங்கக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.