கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஜோஷிமாலா பகுதியில், இரவு நேரத்தில் தங்களது குழந்தையுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட தம்பதியினரை தெருநாய்கள் கூட்டம் சுற்றி வளைத்துத் தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், அமைதியாகச் சென்றுகொண்டிருந்த தம்பதியினரைத் திடீரென வழிமறித்த தெருநாய்கள், அவர்களைக் குரைத்தபடி ஆக்ரோஷமாகச் சூழ்ந்துகொண்டன; இதனால் தம்பதியினரும் குழந்தையும் ஒருகணம் உறைந்துபோய் அச்சத்தில் தவித்தனர். எனினும், சுதாரித்துக்கொண்ட தந்தை, நாய்களை நோக்கித் துணிச்சலுடன் பாய்ந்து அவற்றை விரட்டியடித்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு குடும்பத்தினர் காயமின்றி உயிர் தப்பினர்.
<a href=”http://

“>
இப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.