சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறுமி ஒருவரின் மூக்கிற்குள் சுமார் 60 நாட்களாக வாழ்ந்து வந்த அட்டைப்பூச்சி பத்திரமாக அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அந்தச் சிறுமி தொடர்ச்சியான மூக்கு வலி மற்றும் மூச்சடைப்பால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மேலும் பல மருத்துவர்களிடம் காண்பித்தும் சரியான காரணம் தெரியாத நிலையில், இறுதியாக ஒரு சிறப்பு மருத்துவர் பரிசோதித்தபோது, சிறுமியின் மூக்கின் உட்பகுதியில் கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று அசைவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

“>

இந்த நுணுக்கமான மருத்துவக் கருவிகளின் உதவியுடன் அந்த உயிரினம் வெளியே எடுக்கப்பட்டபோது, அது உயிருடன் இருந்த ஒரு பெரிய அட்டைப்பூச்சி என்பது உறுதியானது. இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அந்தச் சிறுமி குளம் அல்லது குட்டையில் குளித்தபோது, மிகச்சிறிய அளவிலிருந்த அட்டைப்பூச்சி மூக்கிற்குள் நுழைந்திருக்கலாம் என்றும், பின்னர் அங்குள்ள ரத்தத்தை உறிஞ்சி சுமார் இரண்டு மாதங்களில் அது பெரிய அளவில் வளர்ந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உரிய நேரத்தில் அட்டைப்பூச்சி அகற்றப்பட்டதால் சிறுமி தற்போது நலமுடன் உள்ளார். பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் குளிக்கும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.