வனப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மேற்கொள்ளும் சஃபாரியின் போது அரங்கேறும் சில காட்சிகள் காண்போரை உறைய வைக்கும். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், திறந்தநிலை சஃபாரி வாகனத்தில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்திருக்க, திடீரெனப் பாய்ந்து வந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த வளர்ப்பு நாயைக் கவ்விச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ‘dhanjee.solanki’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். எனினும், உற்று நோக்கினால் இந்த வீடியோவில் பல தொழில்நுட்பக் குளறுபடிகள் இருப்பதையும், இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்பதையும் நெட்டிசன்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
<a href=”http://
View this post on Instagram
“>
நிஜ சம்பவத்தைப் போன்றே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், பார்வையாளர்களை திசைதிருப்பும் நோக்கில் இது பகிரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
