ஜம்முவில் உள்ள ஆர்.எஸ். புரா பகுதியில், சர்வதேச எல்லையை (International Border – IB) கடந்த பாகிஸ்தானிய ஊடுருவல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் ஆக்ட்ரோய் புறக்காவல் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 9.10 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தின் பால்வால் தெஹ்சிலில் உள்ள 27-சக் கிராமத்தைச் சேர்ந்த சிராஜ் கான் என்பவர், சுசேத்கர் தெஹ்சிலில் உள்ள எல்லை வேலியை அத்துமீறி நெருங்க முயன்றார்.

அந்த நேரத்தில் கண்காணிப்பில் இருந்த பிஎஸ்எஃப் வீரர்கள், அவரை எச்சரித்தும், அவர் பதிலளிக்காததால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர் உயிருடன் அவரை கைது செய்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடமிருந்து 20 மற்றும் 10 ரூபாய் மதிப்புள்ள பாகிஸ்தான் பண நோட்டுகள் இரண்டு கைப்பற்றப்பட்டதாகவும், இது தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பிஎஸ்எஃப் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், சில பகுதிகளில் எல்லை வேலிகள் மற்றும் காவல் வசதிகள் சேதமடைந்ததை அடுத்து, ஜம்மு எல்லை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.