இந்தியாவில் பல மாநிலங்களிலும் தற்போது குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கடும் குளிர் காரணமாக ஜனவரி 14-ஆம் தேதி வரை பள்ளிகளை மூட முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில முதல்வர் பகவான் மன் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில்  உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் காலை 9 மணி வரை அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால்  அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.