அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இதற்காக குஜராத்தின் வதோதராவில் இருந்து 108 அடி நீளமுள்ள அகர்பத்தி லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு மாதங்களாக 3000 கிலோ சாணம் மற்றும் 91 கிலோ நெய் உள்ளிட்ட பொருள்கள் கலந்து தயாரான இந்த அகர்பத்தி 45 நாட்கள் வரை எரியும் திறன் கொண்டது. அகர்பத்தியை எரிக்கும் போது சுமார் 25 கிலோ மீட்டர் அளவுக்கு நறுமணம் வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது.