இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைனில் புதுவிதமான செய்திகளை வெளியிட்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி Big Butchering என்பது மிகப் பெரிய சைபர் குற்றம். ஆடு முழுவதும் இதன் மூலம் கடந்த ஆண்டு பத்தாயிரம் கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஆண்களை குறி வைத்து பெண்கள் போன் செய்து பிசினஸ் ஐடியா, பகுதி நேர வேலை என்று போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்புவார்கள். இதன் பிறகு உங்களிடம் இருந்து பணத்தைப் பெற்று மோசடி செய்வார்கள். எனவே இது போன்ற அழைப்புகளை தவிர்த்து விடுங்கள்.