வங்கதேச பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பிடித்துள்ளது. தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.

300 இடங்களில் 299 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அவாமி லீக் 200 இடங்களில் வெற்றி பெற்றது. நேற்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நீடித்தது. பொதுத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.