இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக இணையதளங்களில் போலியான செய்திகளை வெளியிட்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

அதன்படி மத்திய அரசு 2024 ஆம் ஆண்டில் 9,60,000 பேருக்கு இலவச மடிக்கணினிகளை வழங்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் மடிக்கணினி குறித்து உலா வரும் செய்திகள் போலியானவை என்று மத்திய அரசு அமைப்பான PIB FACT check பதில் அளித்துள்ளது. லேப்டாப் ஆஃபர் என்ற பெயரில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.