தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே தமிழக நடிகர், நடிகைகள் மற்றும் திரைப் பிரபலங்கள் வரிசையில் நின்று தேர்தலில் ஆர்வமாக வாக்களித்தனர். முதல ஆளாக நடிகர் அஜித் வாக்களித்தார். அதன்பின்னர், ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி,சசிகுமார், தனுஷ் ஆகியோர் வாக்களித்ததை பார்க்கமுடிந்தது.

ஆனால், பல்வேறு முக்கிய பிரபலங்கள் வாக்களிக்க வரவில்லையென தெரிகிறது. முக்கியமாக அவ்வப்போது அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் சிம்பு வெளியூரில் படப்பிடிப்புக்கு சென்றுள்ளதால் வாக்களிக்க வரவில்லை.