தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. முன்னதாக, நேற்று மாநாட்டுத் திடலில் நிறுவப்பட்டிருந்த 100 டன் எடையுள்ள கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் இச்சம்பவத்தை கேலி செய்யும் விதமாக, விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை பதிவிட்டு, “அண்ணன் ஸ்பாட்டில் இல்லாம போயிட்டாரு, இருந்திருந்தால் கயிறு கட்டி தனி ஆளா கிரேனை நிமித்தி இருப்பாரு” என பதிவிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த விபத்து மாநாட்டிற்கு முன்னதாக பேசுபொருளாக மாறியிருந்தாலும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மீதான எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ச்சே அண்ணன் ஸ்பாட்டுல இல்லாம போயிட்டாரு இருந்திருந்தா கயிறு கட்டி கிரேன்ன தனியாளா நிமிர்த்தி இருப்பாரு பச்..
– தவெகவினர் வேதனை😖#தற்குறிகள்_மாநாடு pic.twitter.com/7qTKhqIbqc
— ஜீரோ நானே⭕ (@Anti_CAA_23) August 20, 2025
