சாலையோர உணவகங்களில் சுத்தமற்ற முறையில் உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் பல இடங்களில் பொதுவான பிரச்சினையாக உள்ளது. சிலர் மட்டுமே உணவை மூடி வைப்பது, சுத்தமான முறையில் தயாரிப்பது போன்ற அடிப்படை சுகாதார விதிகளைப் பின்பற்றுகின்றனர்.
ஆனால், பெரும்பாலானோர் உணவைத் திறந்தவெளியில் வைத்தல், வியர்வையுடன் பரிமாறுதல் போன்ற சுத்தமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், வெளிநாட்டில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில் பணிபுரியும் ஒருவர், சொரியாசிஸ் போன்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டதாகத் தோன்றும் நிலையில், கால்களைச் சொறிந்துவிட்டு அதே கைகளால் உணவைப் பரிமாறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த பலர், அதிர்ச்சியுடன் கிண்டலான மற்றும் சிந்திக்க வைக்கும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “இது சாலையோர உணவகம் அல்ல, சொரியாசிஸ் உணவகம்; இங்கு சாப்பிட வருபவர்களுக்கு சொரியாசிஸ் இலவசம்!” என சிலர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளனர்.
View this post on Instagram
“>
மற்றவர்கள், இத்தகைய சுகாதாரமற்ற பழக்கங்கள் உணவு பரிமாறுபவர்களிடம் இருந்து வருவது கவலைக்குரியது என விமர்சித்துள்ளனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பொது இடங்களில் உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுதலில் சுகாதாரத்தைப் பேணுவதன் அவசியத்தைப் பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
