3 ஆண்டுகளுக்கு முன்பு பரந்தூர் சென்று ஏகனாபுரம் கிராம மக்களின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து, “பரந்தூர் Files” என்ற பெயரில் ஆவணங்களை வெளிப்படுத்திய அந்த நாளை இந்தத் தருணத்தில் நினைவு கூர்கிறேன். சென்னைக்கு அருகில் மற்றொரு விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்காக கம்பன் கால்வாய் போன்ற முக்கிய நீர்நிலைகள் பாதிக்கப்படுவதும், அது ஒட்டுமொத்த சென்னைக்கும் எதிர்காலத்தில் பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதும் குறித்து அன்று சுட்டிக்காட்டப்பட்டது.

பறவைகளின் வழித்தடமாக விளங்கும் இப்பகுதியில் இயற்கை வளங்களை அழித்துவிட்டுச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் எந்த வகையிலும் சரியாக இருக்காது என்றே தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 1000 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வரும் ஏகனாபுரம் மக்களுக்கும், இந்திய ஜனநாயகத்தின் மீது அவர்கள் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“>

 

தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளைத் தாங்கள் மறந்துவிடாமல், மக்களின் குரலுக்குச் செவிமடுத்து பரந்தூர் திட்டத்தைக் கைவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இப்பகுதியில் வாழும் மக்களின் சார்பில் நன்றிகள் உரித்தாகுகின்றன.