இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளி, பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்ததோடு, ஒரு சிறுமியின் துணிச்சலான செயலைப் வெளிப்படுத்தியுள்ளது. காணொளியில், இரண்டு சிறுவர்கள் வீட்டிற்கு வெளியே சைக்கிள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, ஒரு சிறுவன் திடீரென மூன்று நாய்கள் வெறி பிடித்தது போல சாலையில் ஓடி வருவதைக் கவனிக்கிறான். உடனே அவன் வீட்டிற்கு ஓடி, ஒரு சிறுமியிடம் இதைச் சொல்கிறான்.
இதைக் கேட்ட சிறுமி வெளியே வந்து, அந்த நாய்கள் ஆக்ரோஷமாக நெருங்கி வருவதைக் பார்த்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, மற்ற சிறுவர்களை வீட்டிற்குள் செல்லச் சொல்லிவிட்டு, அவள் வேகமாக உள்ளே ஓடி, சரியான நேரத்தில் கதவை மூடுகிறாள். இதனால், வெறித்தனமாக ஓடி வந்த நாய்களிடமிருந்து குழந்தைகள் பத்திரமாகக் காப்பாற்றப்படுகின்றனர். இந்த சிறுமியின் புத்திசாலித்தனமான, விரைவான செயலைப் பார்த்த இணையவாசிகள், அவளைப் பாராட்டி, சமூக வலைதளங்களில் தங்கள் புரிதலையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.
