பாகிஸ்தான் கிரிக்கெட் உலகில் கடந்த 2010-ம் ஆண்டு பெரும் புயலைக் கிளப்பிய ஸ்பாட் பிக்சிங் (Spot-fixing) விவகாரம் குறித்து, முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தற்போது ஒரு அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.
அப்போது லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முகமது அமீர் மற்றும் முகமது ஆசிப் ஆகியோர் திட்டமிட்டு ‘நோ-பால்’ வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விஷயம் அப்போதைய கேப்டன் ஷாகித் அப்ரிடிக்குத் தெரிந்ததும், அவர் கடும் கோபமடைந்தாராம். உடனே 18 வயதே ஆன இளம் வீரர் முகமது அமீரை தனது அறைக்கு வரவழைத்த அப்ரிடி, உண்மையைச் சொல்லும்படி கேட்டுள்ளார். ஆனால் அமீர் தொடர்ந்து மறுக்கவே, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அப்ரிடி, அமீரின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்துள்ளார்.
அப்ரிடியின் அந்த அதிரடிக்குப் பிறகுதான் அமீர் அழுதுகொண்டே சூதாட்டத்தில் ஈடுபட்ட உண்மையை ஒப்புக்கொண்டதாக ரசாக் தெரிவித்துள்ளார்.
செல்போன் ரிப்பேர் கடை வைத்திருந்த தனது நண்பர் மூலமாகவே இந்தச் சூதாட்ட ரகசியம் தனக்குத் தெரியவந்ததாகவும் ரசாக் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
