
தமிழகத்தில் செய்திகளின் உண்மைத் தன்மையை மக்கள் அறிந்து கொள்வதற்காக தமிழக அரசு புதிய whatsapp சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாளக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பாகம் தினமும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வெறுப்பு பிரசாரங்கள் மற்றும் செய்திகளை கண்டறிந்து மக்களுக்கு உண்மையான தகவல்களை தரவுகளோடு பதிவிட்டு வருகின்றது.
எனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை மக்கள் அறிந்து கொள்வதற்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பாகம் இந்த சேனலை உருவாக்கியுள்ளது. இதற்கான க்யூ ஆர் கோடு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் வாட்ஸ் அப் சேனலை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.