தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தற்போது முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் வாரிசு படத்தில் நடிகர் சிம்பு தீ தளபதி என்ற பாடலை பாடியிருந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கு வில்லனாக தளபதி 67 படத்தில் கமிட்டாகியுள்ளதாக ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறியிருந்தார். இதில் பிப்ரவரி 3-ஆம் தேதி நடிகர் சிம்புவின் பிறந்த நாள் என்பதால், அந்நாளில் தளபதி 67 படத்தில் நடிகர் சிம்பு நடிப்பதை லோகேஷ் உறுதிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் சிம்பு தளபதி 67 படத்தில் நடிப்பதை லோகேஷ் கனகராஜ் மறைமுகமாக உறுதிப்படுத்தியதால் தான் பிப்ரவரி 3-ஆம் தேதி அப்டேட் வெளியாகும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.