தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி விட்டதாக சில தகவல்கள் அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக நடிகர் அஜித் பற்றிய பல்வேறு விஷயங்கள் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் பிரபல இயக்குனர் சுந்தர் சி பேசிய ஒரு வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது இயக்குனர் சுந்தர் சி நடிகர் அஜித்தை வைத்து உன்னை தேடி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் அஜித் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு பைக் விபத்தில் சிக்கியதால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு நடக்கக்கூட முடியாத நிலை இருந்தது. அதோடு நடிகர் அஜித்துக்கு கடுமையான முதுகு வலியும் இருந்ததால் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பதாக சுந்தர் சியிடம் அஜித் கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் சுந்தர் சி மற்றும் பலர் நடிகர் அஜித்துக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் இருப்பதால் நீங்கள் சினிமாவை விட்டு விலகக் கூடாது தொடர்ந்து நீங்கள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த  தகவலை நடிகர் சுந்தர் சி பகிர்ந்தது தல ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.