சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு தற்போது வருகை புரிந்துள்ள முதலமைச்சர் விஜய் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் விஜயின் தாயார் சோபா சந்திரசேகரும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் ஒரு சுவாரசிய நிகழ்ச்சி அரங்கேறியது. அதாவது திருவிக நகர் எம்எல்ஏ பல்லவியின் கைகுழந்தையை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தூக்கி கொஞ்சினார். அவர் குழந்தையை தூக்கிட்டு வந்த நிலையில் இருக்கை வரை வந்து பல்லவி அமர்ந்த பிறகு குழந்தையை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எம்.எல்.ஏ பல்லவியின் கைக்குழந்தையை தூக்கி கொஞ்சிய அமைச்சர் ஆதவ்… இருக்கை வரை பத்திரமாக குழந்தையை தூக்கி வந்து பல்லவியிடம் கொடுத்த காட்சி..!#Chennai | #CMJosephVijay | #TVK | #MLS | #Singappen | #Pallavi | #PolimerNews pic.twitter.com/Y38NUXSw8Y
— Polimer News (@polimernews) June 9, 2026
