சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு தற்போது வருகை புரிந்துள்ள முதலமைச்சர் விஜய் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக தமிழக முதல்வர் விஜயின் தாயார் சோபா சந்திரசேகரும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ள நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் முதலமைச்சர் விஜய்க்கு மரியாதை செலுத்திய நிலையில் திறந்த வெளி வாகனத்தில் சென்று முதல்வரும் அந்த மரியாதையைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய விஜய் தற்போது அதற்கான சிறப்பு லோகோவை வெளியிட்டுள்ளார். இந்த லோகோவை சிங்கப்பெண் சிறப்பு அதிரடி ஐஜி பவானீஸ்வரி முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
