தமிழகத்தில் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாக்களிலும் தமிழ் தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக விளக்கம் கொடுத்த தமிழக வெற்றி கழகம் தமிழ் தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவதில் தங்களுக்கு உடன் பாடு கிடையாது. ஆனால் இது ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழா என்பதால் அவர்கள் தரப்பிலிருந்து தான் இவ்வாறு பாடப்பட்டதாக விளக்கம் கொடுத்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய `சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ துவக்க விழா#singapen #cmvijay #cmjosephvijay #tnpolice #thanthitv pic.twitter.com/Pn75hPgDma
— Thanthi TV (@ThanthiTV) June 9, 2026
அதே நேரத்தில் மத்திய அரசுக்கு இனி தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும்படி வழிவகை செய்ய வேண்டும் எனவும் முதல்வர் விஜய் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க இருக்கிறார். மேலும் இந்த விழா தொடங்கிய நிலையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. மேலும் இதன் மூலம் தமிழகத்தில் நீண்ட நாட்களாக நிலவை வந்த சர்ச்சைக்கு தமிழக வெற்றிக்கனக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
