சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் விஜயின் தாயார் சோபா சந்திரசேகரும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ள நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் முதலமைச்சர் விஜய்க்கு மரியாதை செலுத்திய நிலையில் திறந்த வெளி வாகனத்தில் சென்று முதல்வரும் அந்த மரியாதையைப் பெற்றுக் கொண்டார்.
#WATCH | சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் ரோந்து வாகனத்தை ஓட்டி பார்த்த முதலமைச்சர் விஜய்#vijay #singapennespecialforces #News18TamilNadu pic.twitter.com/PqrpULOR7E
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 9, 2026
பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய விஜய் தற்போது அதற்கான சிறப்பு லோகோவை வெளியிட்டுள்ளார். இந்த லோகோவை சிங்கப்பெண் சிறப்பு அதிரடி ஐஜி பவானீஸ்வரி முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காண புதிய ரோந்து வாகனங்களை முதல்வர் விஜய் அறிமுகப்படுத்திய நிலையில் முதலில் அவரே அந்த வாகனத்தை ஓட்டி பார்த்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையையும் தொடங்கி வைத்தார்.
மேலும் பெண்கள் பாதுகாப்புக்காக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்த நிலையில் தற்போது அந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இனி பெண்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
