தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் நான்கு முனை போட்டிகள் நிலவ இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டிகள் நிலவுகிறது.
இன்னும் 3 மாதங்கள் மட்டுமே தேர்தலுக்கு இருப்பதால் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இணைப்பது மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபடுகிறார்கள்.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அதிமுக மற்றும் தவெக கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
