தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் பலரும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். திமுக அதே கூட்டணியில் களம் காணும் நிலையில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இன்னும் பல கட்சிகள் தங்களுடன் கூட்டணி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

அந்த வகையில் பாமக கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே பாமக கட்சியின் எம்எல்ஏ சதாசிவம் அதிமுகவுடன் தான் கூட்டணி அமைப்போம் என கூறியுள்ளார். தற்போது பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ள நிலையில் விரைவில் மீண்டும் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது பாமக கட்சியில் உட்க்கட்சி பூசல்கள் நிலவும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் பாமக தங்களுடன் கூட்டணியில் உள்ளதாக கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்கிறது என நம்புவதாக கூறினார். மேலும் பாமக கட்சியிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தங்களுடன் கூட்டணி வைப்பதாக கூறியுள்ளது பாமக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.