தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது மதுரையில் செப்டம்பர் 9ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ எம் ஜி யாதவா மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இதில் வேலைவாய்ப்பு வழங்குவோர் https://forms.gle/EfbscHehvN9RS7sG6 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் போது இலவசமாக உணவு வழங்கப்படும் எனவும் முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நிறுவனத்தின் முத்திரை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த முகாமில் கலந்து கொள்ள வேலை தேடுவோர் கட்டாயம் தங்களுடைய சுய ஆவணங்களுடன் நேரில் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.