சென்னை அருகே சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது முன்னால் சென்ற கார் திடீரென்று திரும்பியதன் காரணமாக மேயர் பிரியா சென்ற கார் அதன் மீது மோதியதில் பின்னால் வந்த லாரியும் மேயர் பிரியா சென்ற கார் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதில் மேயர் பிரியாவின் கார் ஓட்டுநர் லேசாக காயம் அடைந்தார் . ஆனால் பிரியாவிற்கு எந்த வித காயமின்றி தப்பினர். இதனால் அந்த பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.