சென்னையில் இன்று ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினத்தை முன்னிட்டு இந்த வருடம் மெட்ராஸ் வாரம் என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 21 தொடங்கி ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு சென்னையின் பாரம்பரியங்கள் குறித்து பல்வேறு பிரபலங்களின் சிறப்பு கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளது. இதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு  9841049155, 9840085411  என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.