சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் பிப்ரவரி 1ஆம் தேதி அதாவது இன்று மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் http://www.ideunom.ac.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.