தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு சரக்க லாரிகள் நிறுத்தப்படும் என்று தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதிகமாக சரக்கு லாரிகளில் கனிம வளங்கள் ஏற்ற வலியுறுத்தப்படுகிறது. இதற்கு லாரி உரிமையாளர்கள் மறுப்பதால் கனிம வள டெண்டர் எடுத்தவர்களே சொந்தமாக லாரிகள் வாங்கி முறைகேடாக கனிம வளங்களை கொள்ளை அடிக்கின்றன.

போலீசாரும் போக்குவரத்து துறையினரும் லஞ்சம் பெற்று வாகனங்களை விடுவிக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு கோரி அதிக விபத்துக்கள் நடைபெறும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மணல் லாரிகளை இயக்க மாட்டோம் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.