நாட்டின் மிக முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது வரும் ஜூலை ஏழாம் தேதி பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதே நாளில் கோரக்பூர் முதல் லக்னோ வரையும் ஜோத்பூர் முதல் அகமதாபாத் வரையும் என மொத்தம் மூன்று ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

இதில் தமிழக மக்களை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாகியது சென்னை முதல் திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். இது எட்டு பெட்டிகளை கொண்டதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏழுமலையானை தரிசிக்க நினைக்கும் பயணிகளுக்கு இந்த வந்தை பாரத் எக்ஸ்பிரஸ் சேவை நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும். திட்டமிட்டப்படி அனைத்தும் நடைபெறும் பட்சத்தில் சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் வேகம் மணிக்கு 130 கிலோ மீட்டராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்னையில் இருந்து திருப்பதி சென்றடையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.