சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (09.12.2023) தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் எதிரொலியாக கனமழை பெய்த காரணத்தால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் கூட சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகளில் மட்டும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரணம் திங்கள் கிழமை முதல் அரையாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கு தயாராகும் வகையில், பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளுக்கும் இந்த 4 மாவட்டத்தில் நாளைய தினம் திறக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் திறக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏனெனில் பல இடங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தனியார் பள்ளிகளும் திறக்கப்படக்கூடாது என உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.