செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு,  38 மாவட்டங்களுக்கு அறங்காவலர் குழு   நியமிக்கப்பட்டு விட்டது. அதேபோல் முதுநிலைக் கோயில்கள் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு அறங்காவலர் நியமிக்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கின்றது.  இதுவரையில் 46/ 2 , 46/1 , 49/1 ஆகிய  சட்ட பிரிவுகளின் கீழ் இருக்கின்ற திருக்கோயில்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோவில்களில்  அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்து அந்தப் பணி நடைபெற்று வருகிறது. அந்த நியமனங்களிலே எந்தவிதமான தவறும் நடைபெறக்கூடாது என்பதற்காக அதிகமான அளவிற்கு கவனம் செலுத்துகின்ற சூழ்நிலை நிலவுவதால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. வரும் காலங்களில் விரிவுபடுத்தி இன்னும் ஆயிரக்கணக்கான திருக்கோவில்களுக்கு அறங்காவலர் நியமிக்கின்றப் பணி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவகங்கை கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோவிலில் இருப் பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக கோவில் தேர் நிறுத்தப்பட்ட பிறகு, தேர் உடைய திருப்பணி பல ஆண்டுகளாக நடைபெற்றதால்… அந்த பணி காலதாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு கூட இரண்டு முறை பீஸ் கமிட்டி மீட்டிங் அமைதியை ஏற்படுத்துவதாக நடைபெற்றது.

இந்தாண்டு நடத்த வேண்டும் என்ற சூழ்நிலையில் நீதிமன்றங்களுக்கு சென்று உத்தரவு வழங்கப்பட்டது. நீதிமன்றத்திலும் காவல்துறையும், இந்துச் சமய அறநிலைத்துறையும் கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோவிலில் தேரோட்டத்தை ஜனவரி 21 ஆம் தேதி நாள் குறித்து திட்டமிட்டு இருக்கிறார்கள்.  அந்த நாளில் நிச்சயமாக தேரோட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.