புயல் காரணமாக சென்னை முழுவதும் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ள காடாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் கடுமையாக அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்று காலை பால் பவுடர் மற்றும் பிரட் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.