செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது..

செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும், செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பாக மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறை சார்பாக ஜெனரல் துஷார் மேத்தா  ஆஜராகி தனது வாதங்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார்.. கடுமையான குற்றச்சாட்டுகளை செந்தில் பாலாஜி தரப்புக்கு எதிராக அவர் முன்வைத்து வருகிறார்.. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால்  அவரை எங்களால் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியவில்லை.

அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகள் அனைத்தும் நிலுவையில் இருப்பதாலும் எங்களால் விசாரணையை தொடர முடியவில்லை. எனவே எங்களது கடமையை செய்ய முடியாத சூழலில் நாங்கள் இருக்கிறோம் என்ற விஷயத்தை அமலாக்கதுறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் செந்தில் பாலாஜி செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார். அவரிடம் விசாரணையை தாமதப்படுத்த தாமதப்படுத்த விசாரணை என்பது நீர்த்து போகும். ஏற்கனவே ஆதார அழிப்பு என்பது தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த சூழலில் இப்படியானவரிடம் தாங்கள் விசாரணையை  தாமதப்படுத்தும் போது இன்னும் விசாரணையை மோசமானதாக ஆக்கிவிடும் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளது..

இந்த அவதாரத்தில் காலம் தாழ்த்தவே கூடாது, காலம் தாழ்த்தும் ஒவ்வொரு மணித்துளியும் வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் என அமலாக்கத்துறை சார்பாக தனது வாதங்களாக கூறியிருக்கிறார். இதை வாதம் என்பதை சொல்வதை விட செந்தில் பாலாஜிக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகள் என்ற விஷயமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி ஏற்கனவே ரிமாண்ட் செய்யப்பட்டு விட்டார். அப்படி இருக்கும்போது விசாரணைக்காக கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்ட பிறகு  ஆட்கொணர்வு மனு தாக்கல் என்பது சட்டப்பூர்வமானதே இல்லை..

எனவே ஆட்கொணர்வு மனு சட்ட கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் தான் விடை காண வேண்டுமே தவிர, சென்னை உயர்நீதிமன்றம் தலையிட வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய மாறுபட்ட தீர்ப்பை அவர் தகவலாக உச்சநீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.. அது மட்டும் இல்லாமல் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞராக கபில் சிபல் அவர்கள் வாதங்களை முன்வைத்து வருகிறார். 3வது நீதிபதி முடிவுக்காக வழக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.. எனவே அந்த ஒரு முடிவை தெரிந்து கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிடக்கூடாது எனவும், எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்பதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் சிபில் வாதத்தை முன்வைத்து வருகிறார்..

சென்னை உயர்நீதி மன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. 3வது நீதிபதிக்காக தற்போது அனுப்பப்பட்டுள்ளது அப்படி இருக்கும்போது இந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் இதில் தலையிடக்கூடாது என வழக்கை ஒத்திவைத்து விட்டு இறுதி தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என முக்கியமான தகவலை சொல்லியுள்ளார்.. மற்றொரு மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி, தற்போது செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கிறார். மறுபுறம் விசாரணை நடத்த முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் அமலாக்கத்துறை ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பி உள்ளார் மொத்தத்தில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்கள் அந்த குற்றச்சாட்டுகளை கடுமையான முறையில் மறுத்திருக்கிறார்கள் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கின் வாதத்தை பிரதிவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது..

முன்னதாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறையிடம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, அங்கு என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பார்த்த பிறகு நாங்கள் சொல்கிறோம். நீங்கள் உயர்நீதிமன்றத்தை  நாடலாம் என குறிப்பிட்டு சொல்லியுள்ளனர். இந்த சூழலில் மாறுபட்ட தீர்ப்பு இன்று வந்துள்ளது முடிவு என்னவென்று தெரியவில்லை அதற்குள் அமலாக்கத்துறை  உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது..

ஏற்கனவே  பட்டியலிடப்பட்ட அடிப்படையில் வழக்கின் விசாரணை  இன்று பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறக்கூடிய வழக்கு விசாரணை ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் விசாரிங்கள், ஆட்கொணர்வு மனு மீது நீங்கள் முடிவெடுங்கள் என தெரிவித்துள்ளனர்.. அது மட்டும் இல்லாமல் உச்சநீதிமன்ற நீதிபதியான சூரியகாந்த் அவர்கள் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு மிக முக்கியமான ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார்.. ஒரு வாரத்திற்குள் உடனடியாக 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமையுங்கள் என கோரிக்கை முன்வைத்துள்ளார்.. ஒரு வார காலத்திற்குள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உருவாக்குங்கள் என்ற ஒரு முக்கியமான விஷயத்தை நீதிபதி  கூறியுள்ளார்.. ஒரு வார கால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் உடனடியாக 3 நீதிபதிகள் அமர்வை அமைத்து விசாரணை நடத்துங்கள் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு  உச்சநீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தலை கொடுத்துள்ளனர்.

மேலும் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யலாம்
என்றும், நீதிமன்றம் ஜாமீன் வழங்காத நிலையில் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருப்பார் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.