செல்பி மோகம் ஆனது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் மட்டுமல்லாமல் வயதானவர்களும் இந்த செல்பி மோகத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அறிவிக்கு பக்கத்தில் நின்று செல்பி எடுப்பது தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பது என்று எந்தவித ஆபத்தையும் உணராமல் செல்பி எடுத்து வருகிறார்கள். இதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் செல்பி மோகத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக ரயில்வே காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.

அதன்படி ரயில் தண்டவாளங்கள் மீது நடந்து செல்வது, விளையாடுவது விளம்பர மோகத்தில் செல்பி எடுப்பது போன்ற செயல்களால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. எனவே இது போன்ற செல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தண்டவாளங்கள் ரயில்கள் செல்வதற்கு மட்டுமே என்றும் தண்டவாளத்தை கடந்து செல்வது ரயில்வே சட்டம் 147 படி குற்றம் என்றும் தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் செல்ஃபி மோகத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.