சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவை மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்கும் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக, கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றுவதில் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சியில் இணைவதற்குப் போட்டி போடுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆர். கார்த்திகேயன் உட்பட சில திமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
