நடிகர் ரஜினி தற்போது நெல்சன் டைரக்டில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிகசர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர்.

அதன்பின் தன் மகள் ஐஸ்வர்யா டைரக்டு செய்யும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தின் சூட்டிங் தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லால் சலாம் சூட்டிங்கின்போது, புதுச்சேரி சபாநாயகரான செல்வம் ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது உடன் அவருடைய மகள் ஜனனி இருந்தார்.