தெலுங்கு ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு இப்போது திரிவிக்ரம் டைரக்டில் குண்டூர் காரம் எனும் படத்தில் நடித்து வருகிறார். திரிவிக்ரமின் முந்தைய படமான அல வைக்குந்தபுரமுலோ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் அடுத்த வருடம் சங்கராந்தியை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனிடையே மகேஷ் பாபுவின் மகன் கௌதமும், மகள் சித்தாராவும் இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இருக்கின்றனர்.

மேலும் தங்களது குடும்ப நிகழ்வுகள், சுற்றுலா சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா டான்ஸ் வீடியோவை பகிர்ந்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அப்பா போலவே டான்ஸில் கலக்குவதாகவும், டோலிவுட்டுக்கு ஒரு ஹீரோயின் தயார் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/Ctl2yzcp2wU/?utm_source=ig_web_button_share_sheet