பாம்பு என்றால் படையே நடுங்கும் சாதா பாம்புக்கு அந்த நிலை என்றால் ராட்சத பாம்புகளுக்கு எந்த அளவிற்கு பயம் இருக்கும். அத்தகைய பயத்தை அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு வந்த வாடிக்கையாளர்கள் அனுபவித்துள்ளனர். அமெரிக்காவின் சீயோக்ஸ் நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் பொருட்கள் வாங்குவதற்காக சென்று உள்ளார்.

அப்போது அவர் தான் வாங்க போகும் பொருட்களை வைக்க ஷாப்பிங் கூடையை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அந்தக் கூடைக்குள் 6 அடி நீளம் கொண்ட ராட்சத பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் ராட்சதப் பாம்பை மீட்டு கொண்டு சென்றனர். வணிகவளாகத்திற்குள் பாம்பு வந்தது எப்படி என்பதை தெரிந்து கொள்ள சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.