கஃபே காபி டே நிறுவனம் 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான ஏப்ரல் மற்றும் ஜூன் காலாண்டு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கஃபே காபி டே இந்த நிதியாண்டில் 24.57 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் அதே காலகட்டத்தில் 11.73 கோடி நஷ்டத்தை பதிவு செய்த இந்த நிறுவனம் தற்போது மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளது. அதனைப் போலவே கஃபே காஃபி டே நிறுவனத்தின் வருவாயும் 189.63 கோடியிலிருந்து 223.20 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.