மும்பையை ஒட்டிய மன்குர்ட் பகுதியில் உள்ள MHADA காலனியில், 11 வயது ஹம்சா என்ற சிறுவன் பிட்புல் நாய் தாக்குதலால் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 17ஆம் தேதி இரவு 10 மணியளவில் கட்டிட எண் 91Aக்கு முன் ரிக்ஷாவில் விளையாடிக் கொண்டிருந்த ஹம்சா மீது அந்த பகுதியில் வசிக்கும் முகமது சோஹைல் ஹசன் கான் என்பவரின் பிட்புல் நாய் திடீரென பாய்ந்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
इस युवक का नाम सोहिल है यह अपने पालतू कुत्ते से मासूम बच्चे को जानबूझकर कटवा रहा है।
मामला मुंबई का है ।
— Priya singh (@priyarajputlive) July 20, 2025
சம்பவத்தின் போது சோஹைல் ஹசன் நாயை கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக விட்டதால், நாய் ஹம்சாவின் கன்னத்தில் கடித்துவிட்டது. சிறுவன் அழுது ஓடிப்போன நிலையில், யாரும் உடனடி உதவியை வழங்கவில்லை. வீடியோவில் மக்கள் பார்த்து நின்று யாரும் உதவாமல் இருந்தது மனிதநேயக் கேள்விகளை எழுப்புகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நவ்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, முகமது சோஹைல் மீது BNS சட்டப்பிரிவுகள் 291, 125 மற்றும் 125(A) ஆகியவை பொருந்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சோஹைலை கைது செய்யாமல், நீதிமன்ற நோட்டீஸ் கொடுத்த பிறகு காவல்துறையினர் விடுவித்ததாகவும், இது நீதி கெட்ட செயல் என ஹம்சாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
