இந்தோனேசியாவின் சிடார்ஜோ பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்ணின் சிறு வயது குழந்தை திடீரென பயங்கரமாகக் கதறி அழுதுள்ளது. அப்போது அந்தப் பகுதிக்கு வந்திருந்த புர்கா அணிந்த ஒரு பெண், அந்தக் குழந்தைக்கு ஏதோ உதவி செய்வது போலவும், அவனைச் சமாதானம் செய்வது போலவும் நடித்துள்ளார். ஆனால், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் சந்தேகம் அடைந்த தாய், பின்னர் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் அந்தப் பயங்கர உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

​அந்த சிசிடிவி காட்சியில், புர்கா அணிந்திருந்த அந்தப் பெண், குழந்தைக்குப் பின்னால் சென்று மிகக் கொடூரமான முறையில் அவனது உடலில் கிள்ளியது அப்பட்டமாகத் தெரியவந்தது. குழந்தை வலியால் துடித்தபோது, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் சிசிடிவி கேமராவைக் கவனித்த அந்தப் பெண், உடனடியாகத் தன் தவறை மறைக்க அந்தக் குழந்தையைத் தூக்கிச் சமாதானம் செய்வது போல நடித்துள்ளார். எதற்காக அந்தப் பெண் குழந்தையை கிள்ளினார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், குழந்தைகளின் மீதான இத்தகைய வன்முறைகள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளப்படக் கூடாது என இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.