பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய மத போதகரான மௌலானா தாரிக் மசூத், குடும்ப உறவுகள் மற்றும் பாலியல் ரீதியான விஷயங்கள் குறித்துப் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான உறவு குறித்து அவர் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் தரம் தாழ்ந்தவை என்றும், அவை குடும்பக் கட்டமைப்பையே சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

குறிப்பாக, “மகளுடன் தொடர்பு இருந்தால் மனைவியுடன் தொடர்பு கொள்ள முடியாது” என்பது போன்ற அவரது சர்ச்சைக்குரிய விளக்கங்கள், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ​இந்த விவகாரம் பாகிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மௌலானாவின் ஆதரவாளர்கள் இந்த வீடியோ ‘கட்’ செய்யப்பட்டு, தவறான உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதாகக் கூறி அவருக்கு முட்டுக்கொடுத்தாலும், சமூக ஆர்வலர்கள் பலரும் இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகள் சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.

இதுவரை பாகிஸ்தான் அரசு இது தொடர்பாகத் தங்களது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்றாலும், மதத் தலைவர்கள் தங்களது பேச்சுகளில் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தச் சம்பவம் மதத் தலைவர்களுக்கும் நவீன கால இளைஞர்களுக்கும் இடையிலான முரண்பாட்டை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.