ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான ஹென்ரிச் கிளாசன், ஹைதராபாத் நகரில் தனது குடும்பத்துடன் ஆட்டோவில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடப்பு சீசனில் சுமார் 23 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்ட உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான கிளாசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிகவும் எளிமையாகத் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஆட்டோவில் பயணித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

மேலும் ஹைதராபாத் நகரின் 40 டிகிரி வெப்பத்தையும் பொருட்படுத்தாமல், ஒரு சாதாரண பயணியைப் போல அவர் சென்ற விதம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் எவ்வளவு பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் உணர்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

அதே சமயம், இது ஒரு ஜாலியான அனுபவத்திற்காக அவர் மேற்கொண்ட பயணமாக இருக்கலாம் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர். மைதானத்தில் அதிரடி ஆட்டத்தால் மிரட்டும் கிளாசன், மைதானத்திற்கு வெளியே காட்டிய இந்த எளிமை ஹைதராபாத் ரசிகர்களிடையே அவருக்கு இருக்கும் நன்மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. தற்போது சன்ரைசர்ஸ் அணியின் பிளே-ஆஃப் கனவிற்கு கிளாசனின் அதிரடி ஆட்டம் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.