தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமருக்கு 10 கேள்விகள் கேட்கும் முதல்வர் அவர்களே தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்

1. மத்தியில் இருந்து வரும் கல்வி நிதியை பற்றி சொல்கிறீர்கள்.. பல லட்சம் பேரிடமிருந்து ஆலோசனைகளை வாங்கி கல்வி மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையை எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் பொழுது நம் தமிழக மாணவர்கள் மட்டும் புறக்கணிக்கப்படுவது ஏன்.. தமிழ்நாட்டில் பணக்காரர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி என்ற நிலையை வைத்துக்கொண்டு நீங்கள் கல்வி நிதியை பற்றி பேசுவது நியாயமா,

2. தொகுதி வரையறையில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்று உள்துறை அமைச்சரே உறுதி அளிக்கப்பட்ட பின்பு அதே கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்துகளின் தொகுதி வரையறையை மாற்றி, உள்ளாட்சிகளுக்கு தேர்தலும் நடத்தாமல் அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறீர்களே. இதற்கு பதில் என்ன

3. இன்று ஆளுநரை பற்றி விமர்சனம் செய்யும் நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது அடிக்கடி ராஜ் பவனின் படி ஏறினீர்களே… அது மட்டுமல்ல கவர்னரை பார்த்தாலே எதிர்க்கட்சி முகவர் போல உங்கள் கட்சி செயல்படுகிறதேஅதற்கு பதில் என்ன

4. மத்திய அரசின் தமிழ் நிதியை பற்றி பேசும் நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தின் நிலை என்ன? சமீபத்தில் நடந்த ஆசிரியர் தேர்வில் கூட 80 ஆயிரம் பேர் தமிழில் தோல்வியடைந்து இருக்கிறார்கள் என்பதே நம் மாநிலத்தில் தமிழில் நிலை என்ன… என்பதை உணர்த்துகிறது தமிழை உயர்த்துவதற்கு தமிழுக்கு பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் உங்களின் முயற்சி என்ன?

5. வி ஜி ராம்ஜி திட்டத்தை கைவிடுகிறோம் என்று அறிவிப்பு எப்பொழுது விடுகிறீர்கள் என்று கேட்கிறீர்கள்.. கைவிடுவதற்கான திட்டம் அல்ல ஏழை மக்களை கை தூக்கி விடுவதற்கான திட்டம்.. அவர்களுக்கான உதவியை நிதிச் சுமை என்று சொன்னால் நீங்கள் ஏழைகளுக்கானவர்களா? இன்று மகாத்மா காந்தி பெயரை மாற்ற வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் எத்தனை திட்டங்களுக்கு மகாத்மா காந்தி பெயரை தமிழகத்தில் வைத்திருக்கிறீர்கள் அத்தனையும் கலைஞர் பெயரில் தானே இருக்கிறது ?

6. மதுரை எய்ம்ஸ் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை அதை கட்டி முடிப்பதற்கு கால அவகாசம் தேவை அதுவும் வகுப்புகளும்.. தொடர் கட்டிட பணியும் நடந்து கொண்டுதான்.. இருக்கிறது ஆனால் நீங்கள் மத்தியில் ஆட்சி அமைக்கும் போது எய்ம்ஸ் கொண்டு வருவதற்கு கூட முயற்சி செய்யவில்லையே ஏன்?

7. இயற்கை பேரிடர்களுக்கான நிதியை கேட்கும் நீங்கள் சென்னையில் ஒதுக்கப்பட்ட 4000 கோடியில் என்ன செய்தீர்கள் என்று இன்றுவரை பதில் இல்லை சென்னை மழைக்காலங்களில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது

8. இன்று தமிழக வளர்ச்சிக்கு காரணம் சென்னை திருச்சி கோவை தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கங்கள் நாட்டிலேயே அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கின்ற வந்தே பாரத் ரயில்கள்… தாங்கள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பொழுது கூட்டணிகள் பதவியை அனுபவித்தீர்களே எத்தனை விமான நிலையங்களை அதிவேக ரயில்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தீர்கள் என்று சொல்ல முடியுமா?

9. கீழடி அறிக்கை எப்பொழுது வரும் என்று கேட்கிறீர்களே ஸ்டாலின் அவர்களே கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கி வித்திட்டது மரியாதைக்குரிய மோடி அவர்கள் தான் என்பது உங்களுக்கு தெரியுமா? தாங்கள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பொழுது எத்தனை அகழ்வாராய்ச்சிகளுக்குநிதி ஒதுக்கினீர்கள்? தமிழின் தொன்மையை கொண்டு வருவதற்கு தங்களின் முயற்சி என்ன?

10.சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு என்று தெரிந்த பின்பும் நீட் விலக்கு எப்போது வரும்.. என்று இப்போது கேட்கும் நீங்கள்.. தேர்தலின் போது முதல் கையெழுத்து நீட்விலக்கு என்று ஏன் பொய் சொன்னீர்கள்? என்று பதிவிட்டுள்ளார்.