சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தோப்பூர், மேச்சேரி, தாரமங்கலம் என பல பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் காடையாம்பட்டிக்கு செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது. சுமார் ஒரு மணி நேரமாக சேதமடைந்த பகுதியிலிருந்து தண்ணீர் வெளியேறியதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த தகவல் அறிந்த அதிகாரிகள் மின் மோட்டாரை ஆஃப் செய்து தண்ணீரை நிறுத்தினர். இந்த பகுதியில் பலமுறை இதுபோன்று குழாயில் சேதம் ஏற்பட்டு அவ்வப்போது சரி செய்யப்பட்டு வருகிறது. பழுதான குழாயை நீக்கிவிட்டு புதிய குழாய் அமைத்தால் இது போன்ற பிரச்சனை ஏற்படாது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.