ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் சுமார் 48 மணி நேரம் எதிரிகளிடம் சிக்காமல் மறைந்திருந்த அமெரிக்க விமானப்படை அதிகாரி ஒருவர், அதிரடி ராணுவ நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். ஈரானிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15இ (F-15E) போர் விமானத்தில் இருந்த இந்த அதிகாரி, பாராசூட் மூலம் குதித்து தப்பினார்.
ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஜிபிஎஸ் கருவியுடன், ஈரானிய துருப்புக்களின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பி மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்தார். இவரை மீட்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில், போர் விமானங்கள் மற்றும் கமாண்டோக்கள் அடங்கிய ஒரு பிரம்மாண்ட மீட்புப் படை களமிறக்கப்பட்டது.
ஹாலிவுட் பட பாணியில் நள்ளிரவில் நடந்த இந்த ஆபத்தான ஆபரேஷனில், அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏ-10 ரக விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தின. அதிகாரி மறைந்திருந்த இடத்தை நோக்கி வந்த ஈரானிய வாகனங்கள் மீது அமெரிக்கப் படைகள் குண்டுமழை பொழிந்து தடுத்தன.
இந்த மோதலில் அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அந்த அதிகாரி வெற்றிகரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக குவைத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
IRGC PR: A U.S. enemy #aircraft searching for the downed fighter pilot was destroyed in southern Isfahan. Further details to follow.#Iran #IRGC #BreakingNews #Pilot #War pic.twitter.com/UeJWSDPbJo
— Consulate General of the I.R. Iran in Mumbai (@IRANinMumbai) April 5, 2026
“>
“எந்தவொரு அமெரிக்க வீரரையும் நாங்கள் தனியாக விட்டுவிடமாட்டோம்” என்று டிரம்ப் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அமெரிக்க-ஈரான் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
