ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திரத் தொடக்க வீரர்களான 24 வயது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி இணை நடப்பு ஐபிஎல் தொடரில் பட்டையைக் கிளப்பி வருகின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 200-க்கும் மேற்பட்ட ரன்களைத் துரத்திய போது, இந்த ஜோடி அதிரடியான தொடக்கத்தைத் தந்தது.
குறிப்பாக, 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி பயமேதுமின்றி பந்துகளைச் சிதறடித்தார். இதுகுறித்து பேசிய ஜெய்ஸ்வால், “அவர் பேட்டிங் செய்வதை எதிர்முனையில் இருந்து பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது; பந்து நம் எல்லைக்குள் வரும்போது அதை அடித்து ஆட வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம்” எனத் தெரிவித்துள்ளார். 24 வயதான தன்னையே சீனியராகப் பார்க்கத் தோன்றுவதாகவும், ஆனால் தானும் இன்னும் இளைஞன் தான் என்றும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
