சமூக வலைதளங்களில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பெண் ஒருவர் வீசிய ஓவர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு இடையே நடைபெற்ற அந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், 3 ஓவர்கள் முடிவில் ஒரு அணியின் ஸ்கோர் 32 ரன்களாக இருந்தது. அதன்பின் பந்து வீச வந்த ஒரு பெண், பந்தை ஸ்டம்பிற்கு நேராக வீச முடியாமல் அடுத்தடுத்து ‘வொய்டு’ (Wide) பந்துகளாக வீசத் தொடங்கினார்.
She created a record in white ball 🥵🔥 pic.twitter.com/dG0dr7UtkM
— RVCJ Media (@RVCJ_FB) April 28, 2026
ஓவரின் பாதியிலேயே (3.5 ஓவர்) அந்த அணியின் ஸ்கோர் 32-லிருந்து 69 ரன்களாக எகிறியது. அந்தப் பெண் வீசிய வொய்டு பந்துகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் சென்றது. கடைசி பந்தையும் அவர் வொய்டாகவே வீச, அந்த ஓவரில் மட்டும் எத்தனை ரன்கள் கொடுக்கப்பட்டது என்பது தெரியாமல் வீடியோ முடிவடைகிறது.
எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்து வருகின்றனர். “இதற்கு பேசாமல் பேட்டர் 6 சிக்ஸர்களை அடித்திருக்கலாம், சீக்கிரம் ஓவர் முடிந்திருக்கும்” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். “பேட்டிங் செய்ய வாய்ப்பு தராமல் பேட்டருக்கு தண்டனை கொடுக்கும் வினோத முறை இது” என மற்றொருவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். வொய்டு பந்துகளால் ஒரு ஓவரிலேயே ஸ்கோர் கார்டை தலைகீழாக மாற்றிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
